Sunday 26 July 2015

sep-2 all india strike
செப்- 2 பொது வேலை நிறுத்தம்
மோடி பிடிவாதம்

           பிரதம மந்திரி மோடி டெல்லியில் மையத் தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஏஆய்சிசிடியு, ஏஆய்டியுசி, சிஆய்டியு, பிஏம்ஏஸ், அய்ஏன்டியுசி  உட்பட கூட்டத்தில் 12 மையச் சங்கத்தைச் சேர்ந்த 21 தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில்  ஏஆய்சிசிடியு பொதுச்செயலாளர் ராஜீவ் டிமிட்ரீயும் கலந்துகொண்டார்இந்த உயர்மட்டக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் சேட்லி, தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாரேயா பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திராபிரதான், மின்துறை அமைச்சர் பையூஸ் கோயல் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தக் குழுதான் தொழிற்சங்கங்களை அரசின் முடிவுகளுக்கு இணங்க வைக்கும உயர்மட்டக் குழுவாகும்.
தொழிற்சங்க வட்டாரங்களிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த சந்திப்பு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 12 மையத் தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் அறிவித்திருந்த பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தொழிற்சங்கத் தலைவர்கள் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து விளக்கிப் பேசினார்கள். பிரதமர் மோடியும் இதர அமைச்சர்களும் பொறுமையுடன் செவி மடுத்தார்கள். ஆனால் பிரதம மந்திரி மோடியோ எந்த விதமான வாக்குறுதிகளையும் தரவில்லை.இக்கூட்டம் சூலை 19ந்தேதி நடைபெற்றது 1மணி நேரத்திற்கு மேல் நடந்தது. மறுநாள் 20,21 தேதிகளில் 46வது இந்திய தொழிலாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை மோடிதான் துவக்கி வைத்து உரையாற்றினார். இம்மாநாட்டில் மையத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் அனைத்து மாநிலங்களிலிருந்து தொழிலாளர்துறை செயலாளர்கள், தொழிலாளர்துறை ஆணையாளர்கள் மற்றும் முதலாளிகள் சங்கத் தலைவர்கள் கலந்கொண்டார்கள். ஏஆய்சிசிடியு சங்கம் சார்பில் தோழர் சந்தோஷ்ராயும் கலந்துகொண்டார்.
மோடி சந்திப்பின் போது பல்வேறுபட்ட சங்க நிலைபாடுகளைக் கொண்டு பிளவுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தனர். மோடிக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆற்றைக் கடக்கும்பொழுது ஆறு விழித்திருக்கிறதா? உறங்குகிறதா? ஏன்ற பரிசோதித்துப் பார்த்தாக ஒரு கதை உண்டு. ஆறு விழித்திருக்கும்வரை ஆற்றைக்கடக்க முடியாது என்பதை மோடி புரிந்து கொண்டார்.
டெல்லியில் 46-வது இந்திய தொழிலாளர் மாநாட்டை துவக்கி வைத்துப்பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியது," தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் கருத்து ஒற்றுமையுடன்தான் இந்தமாற்றங்களை கொண்டுவருவோம். கருத்து ஒற்றுமை ஏற்படுத்துவதற்றாக மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி தலைமையில் அமைச்சகங்களுக்கிடையிலான உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' ஏன்று பேசியுள்ளார். அதே மாநாட்டில் அருண்சேட்லி பேசும் போது,"முதலீடுகளுக்கான எற்றுக்கண்ணை அடைத்தால், வேலைவாய்ப்பு பெருகாது. பொருளாதார செயல்பாடுகளும் வளராது. தற்போது உள்ள வேலைகளுக்கும் அது அச்சுறுத்தலாக அமைந்துவிடும். ஏனவே பொருளாதார நடவடிக்கைளுக்கு தீங்கு விளைவிக்கும் போக்கை தொழிற்சங்கங்கள் கைவிடவேண்டும்''.
மோடியும் அருண்சேட்லியும் வலியுறுத்தும் கருத்தொற்றுமை ஏப்படிப்பட்டது?. தொழிலாளிவர்க்கத்திற்கு ஏந்த வகையில் நன்மை பயக்கும்?. கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன் சார்ந்தது அல்லவா? மோடி மேலும் பேசுகிறார்," குறைவான நபர்களைக்கொண்டு, அதிகப்பட்ச நிர்வாகத்தை ஆளிப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். அதன்படி தற்போது நடைமுறையில் ஈல்லாத சட்டங்களை நீக்கி வருகிறோம்''  ஏன்றார். நவதாராளவாதக் கொள்கை நடைமுறைக்கு வந்தபின்பு பல தொழிலாளர் சட்டங்களை ஆரசு திட்டமிட்டு அமுலாக்குவதில்லை.  8 மணி நேர வேலை, மிகைநேர வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் ஏன பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் நடைமுறையில் இல்லாமல் ஆக்கிவிட்டு "தற்போது நடைமுறையில் இல்லாத சட்டங்களை நீக்கி வருகிறோம்என்பது தொழிலாளிவர்க்கத்திற்கு செய்யும் துரோகம் இல்லையா?. "குறைவான நபர்களைக்கொண்டு, அதிகப்பட்ச நிர்வாகத்தை அளிப்பதுதான் மத்திய அரசின் நோக்கம்.'' என்றால், அதுதான் கிரீஸில் கடைபிடித்த சிக்கன நடவடிக்கை. அதனால் நாடே திவலாகவில்லையா, இன்னும் மோடி வேடிக்கையாக சொல்கிறார்." தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்றாலே தொழிலாளிக்கு விரோதமானது அல்ல. தொழிலாளர்கள் வருத்தப்படுகிறார்கள் என்றால் யாரவது மகிழ்சியாக இருக்க முடியுமா? 1961 பயிற்சியாளர் சட்ட திருத்தத்தை ஏடுத்துக்கொள்ளுங்கள். இச்சட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் 2 கோடி பயிற்சியாளர்கள். ஜப்பானில் 1 கோடி பயிற்சியாளர்கள். மிகவும் சிறிய நாடான ஜெர்மனியில் 30 லட்சம் பயிற்சியாளர்கள். ஈந்தியாவில் வெறும் 3லட்சம் பயிற்சியாளர்கள். ஈதை குறைந்தபட்சம் 20 லட்சம் பயிற்சியாளர்கள் ர்ன்றாவது உயர்த்த வேண்டாமா? நான் தொழிற்சங்கங்களைப் பார்த்துக் கேட்கிறேன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டாமா? தொழிற்சங்கங்கள் வருங்கால தொழிலாளிவர்க்கத்தின் நலனைப் பார்க்கவேண்டாமா? இருக்கின்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டாமா'', என்று கூறியதோடு  மோடி, முதலாளி சங்கங்களைப் பார்த்து கேட்கிறார்," பயிற்சியாளர்களை உருவாக்குங்கள், அதை கார்ப்பரேட் சமூகப் பொறுப்புகளில்ஒன்றாக்குங்கள்.
தொழிலாளி வர்க்கம் மோடி சர்க்காரை பார்த்து கேள்வி கேட்கிறது. பயிற்சியாளர் ஏன்ற சட்டப் பாதுகாப்பில்தான் கடந்த 20 இரண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கான இளம் பெண்கள் மாங்கல்யத் திட்டம்என்ற பெயரில் வேலை வாங்கப்பட்டு வருகிறார்கள். அது போன்ற அவல நிலையுள்ள வேலை வாய்ப்பா? சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பயிற்சியாளர்களாக பல ஆண்டுகளாக தொடரும் நிலையா? கோடான கோடி ஈந்திய இளைஞர்களின் ரத்தத்ததை குடிக்க காத்துக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதாரவானதுதானே மோடியின் சீர்திருத்தம்.
அடிக்கடி அருண்ஜேட்லி பேசுகிறார். அந்நிய மூலதனம் தாராளமாக வரவேண்டுமென்றால், செய்ய வேண்டிய உடனடி வேலைகள் மூன்று. 1. தொழிலாளர் சட்டத்திருத்தம். 2 நிலம் கையகப்படுத்தும் சட்டம். 3. முதலாளிகளுக்கு ஆதாயம் அளிக்கும் வரிச் சீர்திருத்தம்.இவை அப்பட்டமாக கார்ப்ரேட் முதலாளிகள் சார்ந்த திட்டம். கார்ப்ரேட் முதலாளிகளின் நலன்களுக்கு ஆதரவான கொள்கையோடு எப்படி கருத்தொற்றுமை கொள்வது? எப்படி மோடியின் கொள்கையோடு ஒத்துப்போக முடியும்?
தமிழக ஆரசின் தொழிலாளர்துறை முன்பாக பல கோரிக்கைளை முன் வைத்து ஏஆய்சிசிடியு குழு சந்தித்து பேசியது. நாங்கள் வைத்த பல கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவாக இருப்பதால் ஏங்களால் அமுல்படுத்த முடியாதுஎன்று தொழிலாளர் துறை கூறிவிட்டது, மத்தியில் சீர்திருத்தங்கள் காத்திருப்பதால் நடைமுறைச் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்கள்.

ஆள்வோர்கள் ஆடுவார்கள் பாடுவார்கள் சமயத்தில் கண்ணீர்விட்டும் அழுவார்கள்.
ஆடு நனைகிறதே என்று  ஓநாய்கள் கண்ணீர்விடுகிறதாம்.
அரசு தனது நிலைபாட்டில் உறுதியாகஇருக்கும்பொழுது தொழிலாளி வர்க்கமும் தன் நிலையில் உறுதியோடு செப்-2 வேலை நிறுத்தத்தை உறுதியாக அமுலாக்கும்.-ஏன்கே